தினமலரும் என் வலைப்பதிவும்!
கிட்டத்தட்ட 3 வாரங்களுக்கு முன் அனானி நண்பர் ஒருவர் என் பதிவின் பின்னூட்டத்தில் என் வலைப்பதிவு பற்றி தினமலரில் குறிப்பு வந்திருப்பதாகக் கூறியிருந்தார். ஆனால், உரலை அவர் குறிப்பிடாததால், அதை விட்டு விட்டேன். இப்போது சற்று பிரயத்தனப்பட்டு, தினமலர் வலைத்தளத்தில் தேடி அக்குறிப்பு அக்டோபர் 16ஆம் தேதி வந்துள்ளதை அறிந்து கொண்டேன். மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு !!! அவ்வுரல் கீழே:
http://dinamalar.com/2005oct16/flash.asp
தினமலருக்கு (தமிழ்மணத்திற்கும், அதன் வாயிலாக எனக்குக் கிட்டிய வாசக நண்பர்களுக்கும் கூடத் தான்!) என் நன்றி !
என்றென்றும் அன்புடன்
பாலா
*169*
8 மறுமொழிகள்:
வாழ்த்துகள் பாலா. தினமலரால் குறிப்பிடப்பட்ட இன்னொரு வலைப்பதிவரைக் காண்பதில் மகிழ்ச்சி.
http://www.dinamalar.com/2005Nov08/flash.asp
http://koodal1.blogspot.com/2005/11/50.html
அடேயப்பா நோபல் பரிசு குடுத்துட்டாங்கப்பா!
வாழ்த்துக்கள் பாலா
அனானி
//அடேயப்பா நோபல் பரிசு குடுத்துட்டாங்கப்பா!//
அப்படியில்லங்க உங்களுக்கு வேணா அது சாதாரண விஷயமாக இருக்கலாம். எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியான விஷயமே
மென்மேலும் தொடர்ந்து எழுதுங்கள் பாலா. உங்களுக்கு எனது அன்பு வாழ்த்துக்கள்.
பாராட்டுகள் பாலா.
குமரன், கணேஷ், மூர்த்தி, பரஞ்சோதி,
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
அனானி,
நிச்சயம் தம்பட்டம் அடிப்பதாக எண்ணவில்லை. மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொண்டேன். அவ்வளவே !!! நன்றி.
அன்புடன்
பாலா
குமரன்,
உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் :-)
நன்றிகள் பாலா
Post a Comment